SuperTopAds

இளம்பெண்ணை கடத்த முயன்று தர்ம அடி வாங்கியவர், வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்..

ஆசிரியர் - Editor I
இளம்பெண்ணை கடத்த முயன்று தர்ம அடி வாங்கியவர், வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்..

சிறுமியைக் கடத்தும் நோக்குடன் நடமாடினார் என்ற குற்றம்சாட்டில் நாவந்துறைப் பகுதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட போதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

 யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தைப் பகுதியில் இன்று முற்பகல் ஒருவர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடினார். அவர் கடந்த 23ஆம் திகதியும் அந்தப் பகுதிக்கு வந்து 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் செல்ல முற்பட்டார் என்று அங்கு நின்ற சிலர் தெரிவித்தனர்.

அதனால் நாவாந்துறை சந்தைப் பகுதியில் கூடியிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவித்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தாக்குதலுக்கு இலக்கான நபரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர்.

அதனை அடுத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையின் 24ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காக யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவித்தார்.

சந்தேகநபரை பொலிஸார் திட்டமிட்டே தப்பிக்கவிட்டுள்ளனர். சிறுமிகளைக் கடத்தும் அந்த நபரால் சமூகத்துக்கு ஆபத்து உண்டு. எம்மால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட நபரை பொலிஸார் எவ்வாறு தப்பிக்க விட்டனர்

அந்த நபரைக் கைது செய்யப் பொலிஸார் தவறினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் நாவாந்துறை மக்கள் தெரிவித்தனர்.