ஐனாதிபதி வீடு முற்றுகைக்குள்..! மீரிஹானவில் பதற்றம், பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை குவிப்பு..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலையேற்பட்டுள்ளது.
மிரிஹான – பெங்கிரிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்று வருகின்றது.
ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், கலகம் தடுக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.