பாலியல் இச்சைகளுக்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல்!! -கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் 7 பேர் கைது-

ஆசிரியர் - Editor II
பாலியல் இச்சைகளுக்காக மனைவிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல்!! -கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் 7 பேர் கைது-

இந்தியாவின் கேரளா மானிலத்தில் பாலியல் இச்சைகளுக்காக தமது மனைவிகளை மாற்றிக் கொள்கிற கும்பலை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கோட்டயம் பகுதியில் கைது செய்யப்பட்ட 7 பேர் கொண்ட இந்த கும்பல் சாட்டிங் குழுக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அமைத்து தங்கள் மனைவிகளை தற்காலிகமாக அடுத்தவர் மனைவிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்து செயல்பட்டு வந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பெண் ஒருவர் பதிவு செய்யத முறைப்பாட்டில் தமது கணவர் வேறு ஆணுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோருடன் இந்த கும்பல் தொடர்பில் இருப்பதால் கேரளத்தையே உலுக்கிய இவ்வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு