SuperTopAds

இந்தியாவில் மேலும் ஆபத்து அதிகரிப்பு!! -புதியவகை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் மேலும் ஆபத்து அதிகரிப்பு!! -புதியவகை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு-

இந்தியாவில் ஆபத்தான புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று புதன்கிழமை மேலும் 13 பேருக்கு புதியவகை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.

மேற்படித் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் தனி அறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.