யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் அடுத்த 16 மணித்தியாலங்களுக்கு கனமழை..! வெள்ள அபாயம் தொடரும், மக்களுக்கு எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I

"புரவி" புயல் வடமாகாணம் ஊடாக கடந்து சென்றபோதும் தீவிர தாழமுக்கமாக மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 48 மணி நேரமாக நிலைகொண்டிருக்கிறது.

இது அடுத்துவரும் 16 மணித்தியாலங்களுக்கு அதே இடத்தில் நிலைத்திருக்கும் நிலையில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் கனமழை தொடரும்,

என யாழ்.பல்கலைகழக புவியில்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இன்று இரவு அல்லது நாளை (06.12.2020) அதிகாலையும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்புண்டு. சிலவேளை அதற்கு முன்பாக 

இத்தாழமுக்கம் கரையைக் கடந்தால் வடக்கில் படிப்படியாக மழை குறையும். ஆனாலும் தற்போதைய நிலையின் படி தாழமுக்கம் அதே இடத்தில் தொடரவே வாய்ப்புண்டு. 

ஏற்கெனவே மண், நீர் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் 50 மி.மீ. மழை கிடைத்தாலே வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே மக்கள் தொடர்ந்தும் 

அவதானமாக இருப்பது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு