வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட இணங்கி பொதுவெளியில் அம்பலமான சகல அரச அதிகாரிகளும் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்..!

ஆசிரியர் - Editor I
வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட இணங்கி பொதுவெளியில் அம்பலமான சகல அரச அதிகாரிகளும் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்..!

அரசியல்வாதி ஒருவரின் வெற்றிக்காக உழைப்பதற்கு இணங்கிய பகிரங்கமாக பெயர் குறிப்பிடப்பட்ட சகல அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கப்படுவார்கள். என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்காக ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் சிலர் தலமையில் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பெயர்களை குறிப்பிட்டு

அவர்கள் அனைவரும் குறித்த வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்பதற்கு இணங்கியிருக்கின்றார்கள். என ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பெயர்களை பகிரங்கமாக மேடை பேச்சு ஒன்றில் கூறியிருக்கின்றார். இதனடிப்படையில் அவர் குறிப்பிட்ட பெயர்களில் பலர் இப்போதும் அரச சேவையில் உள்ளனர். 

மேலும் அவர்களுக்கு தேர்தல் கடமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த விடயம் மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி அலுவலர், மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகிரங்க மேடை பேச்சை அடிப்படையாக கொண்டு, 

குறித்த அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டு தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கப்படுவார்கள். என கிளிநொச்சி மாவட்ட தொிவத்தாட்சி அலுவலர் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு