SuperTopAds

நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!! -கர்ப்பிணி பலி-

ஆசிரியர் - Editor III
நேபாளத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு!! -கர்ப்பிணி பலி-

நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது நபர் உயிரிழந்துள்ளார். இந்நாட்டில் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. 

அந்நாட்டில், 281 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனினும், இதுவரை யாரும் பாதிப்புக்கு பலியாகாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் துணை செய்தி தொடர்பு அதிகாரியான சமீர் குமார் கூறும்பொழுது, கடந்த 6ந்தேதி 29 வயதுடைய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்தது.  மறுநாள் தாய் மற்றும் சேய் இருவரும் ஆரோக்கியமுடன் வீடு திரும்பினர்.

ஆனால், அந்த பெண் கிராமத்தில் தனது வீட்டில் இருந்தபொழுது, காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனை தொடர்ந்து கடந்த 14ந்தேதி துலிகேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.  

விரிவான விசாரணை மற்றும் தொடர் பரிசோதனைகளில் இருந்து அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதுவே கொரோனாவுக்கு நாட்டின் முதல் உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்.