பலாலி விமான நிலையத்தின் சேவைகள் மிக விரைவில்..! பிரதமா் தலமையில் உயா்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்தின் சேவைகள் மிக விரைவில்..! பிரதமா் தலமையில் உயா்மட்ட கலந்துரையாடல்..

யாழ்.பலாலி விமான நிலையம் தொடா்பாக பிரதமா் தலமையில் இன்று காலை விசேட கலந்து ரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்கள் தவிர, சிவில் விமான சேவைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும், சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் 

இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக அறியமுடிகின்றது. குறிப்பாக பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்தி முதற்கட்டமாக மத்திய கிழக்கு மற்றும் இந்தியா 

ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு இந்த சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

இந்தியாவின் உதவியுடன் யாழ் பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு