SuperTopAds

50 வருடங்களுக்குட்பட்டதே மன்னாா் மனித புதைகுழி, மக்கள் ஐ.நாவின் உதவியை கேட்கவேண்டும்..

ஆசிரியர் - Editor I
50 வருடங்களுக்குட்பட்டதே மன்னாா் மனித புதைகுழி, மக்கள் ஐ.நாவின் உதவியை கேட்கவேண்டும்..

மன்னாா்- சதோஷ வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்கள் 50 ஆண்டுகளுக் கு உட்பட்டவை. என கூறியிருக்கும் தடயவியல் நிபுணரும், பேராசிாியருமான செல்வ சுரேஷ் ஐ.நா மனித உாிமைகள் ஆணையகம் இதில் தலையிடவேண்டும் எனவம் கூறி யிருக்கின்றாா். 

மன்­னார் புதை­கு­ழி­யில் மீட்­கப்­பட்ட எலும்­புக் கூடு­கள் அமெ­ரிக்­கா­விற்கு கார்­பன் பரி­ சோ­த­னைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டன. அதன் முடி­வு­கள் கடந்த வாரம் வெளி­யி­ டப்­பட்­டன. அது கி.பி. 1400 – கி.பி. 1650 ஆம் ஆண்டு காலத்­துக்­கு­ரி­யது என்று பரி­சோ­ தனை அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. 

இது தொடர்­பில் செல்வ சுரேஸ் தெரி­வித்­த­தா­வது,

மனித எச்­சங்­கள் மண்­ணின் தரம் தட்­ப­வெட்ப சூழ்­நி­லைக்கு ஏற்ப அது பாது­காக்­கப்­ப­ டும் காலம் வேறு­பா­டும். நான் நேரில் பார்த்த தட­ய­வி­யல் மருத்­து­வர் என்ற ரீதி­யில் என்­னால் அந்த ஆய்வு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்ள கால அள­வுக்கு உட்­பட்­ட­தல்ல என்­றும் அது அரை நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டவை என்­றும் கூற­மு­டி­யும்.

இலங்­கை­யில் இந்த ஆய்வை மேற்­கொள்­ளும் அள­வுக்கு அனு­ப­வ­முள்ள தட­ய­வி­யல் ஆய்­வா­ளர்­கள் இல்லை என்­பது எனது கருத்து. பன்­னாட்டு மனித உரிமை ஆணை­ய­ கம் பரிந்­து­ரைக்­கும் தட­ய­வி­யல் மருத்­து­வர்­களை கொண்டு வெளிப்­ப­டை­யான ஆய்­ வின் மூலமே உண்­மையை வெளிக்­கொண்­டு­வர முடி­யும் – என்­றார்.