சஜித் பிறேமதாஸ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய அரச அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய அரச அதிகாாிகள்..

மூளாயில் நேற்று இடம்பெற்ற பொன்னொளி நகர கிராம மக்களுக்கு அமைக்கப்பட் ட 65 வீடுகளை கையளிக்கும் நிகழ்ச்சியில் அரச அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விக ளை கேட்டு அதிகாரிகளை சங்கடத்துக்குள்ளாக்கினார் அமைச்சர் சஜித்பிரேமதாஸ.

பொன்னொளி கிராம வீட்டுத்திட்டத்தின் முன் வாயிலில் அமைக்கப்பட்ட வைரவர் ஆ லயத்தை கண்ட அமைச்சர் அருகில் சென்று " ஏன் இந்த ஆலயத்தை சிறியதாக உள்ளது" என கேள்வி எழுப்பியதுடன் கலாசார உத்தியோகத்தரை 

உடனடியாக அழைக்குமாறு கூறினார். அங்கும் இங்கும் ஓடிய அதிகாரிகள் ஒருவித மாக கலாசார உத்தியோகத்தரை அழைத்துவந்தனர். குறித்த உத்தியோகத்தரிடம் விசாரித்து ஆலயத்தை பெரிதாக அமைக்க நடவடிக்கை 

டுக்குமாறு பணிப்புரை வழங்கினார். அடுத்து இங்கு நீர் விநியோக நடவடிக்கை யினை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய போது அதிகாரிகள் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே சொல்லமுடியாது நின்றார்கள். 

பிரதேச சபை தலைவரை கூப்பிடுங்கள் என கேட்டபோது சம்பவ.இடத்துக்கு வந்த யாழ்.அரச அதிபர் தாம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சருக்கு கூறினா ர். பின்னர் அங்குள்ள வீடுகளுக்கு சென்ற அமைச்சர் மக்களுக்கு வீடுகளை 

கையளிக்கும் போது "சந்தோசமா பிரச்சினைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள்" என தமிழில் கேட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு