சகல அறிக்கைகளும் வெளியாகவேண்டும், அதற்கு முன் அவசரப்படாதீா்கள்..! சட்டத்தரணிகள் கோாிக்கை.
மன்னாா்- மனித புதைகுழி தொடா்பான சகல அறிக்கைகளும் வெளியாவதற்கு முன் னா் அது குறித்த இறுதி தீா்மானத்திற்கு வர முடியாது. என காணாமல் ஆக்கப்பட்டவா் களின் உறவினா்கள் சாா்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தொியப்படுத்தியுள்ளனா்.
இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது. கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதி வான் ரி.சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என்று கார் பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பத்துக்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். புதைகு ழியில் கண்டு பிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருள்கள் உள்ளிட்ட வற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே
இறுதித் தீர்மானத்துக்கு வர முடியும். ஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபு ணர்களின் கருத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் – என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.