யாழ்.சங்கானையில் விபச்சார விடுதி நடத்தும் தனியாா், கிராம மக்களின் முறைப்பாட்டை கண்டு கொள்ளாத அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சங்கானையில் விபச்சார விடுதி நடத்தும் தனியாா், கிராம மக்களின் முறைப்பாட்டை கண்டு கொள்ளாத அதிகாாிகள்..

சங்கானை பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட பகுதியில் தனியாா் ஒருவா் சட்டவிரோத மாக மதுபானம் விற்பனை செய்வதுடன், தனது வீட்டில் விபச்சார விடுதி ஒன்றையும் நடத்துவதாக அப்பகுதி மக்கள் மறையிட்டுள்ளாா். 

இச் சமூக சீரழிவு தொடர்பில் இலங்கை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சங்கானை பிரதேச செயலரிடமும் மக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர். 

வலி.மேற்கு சங்காணை பிதேச செலர் பிரிவில் உள்ள ஜே.169 கிராம சேவையாளர் பிரிவில் தனி நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றார். 

அத்துடன் குறித்த விப்பனையகத்தில் மதுபானங்களை நுகர்வதற்கும் அனுமதி வழங்கி வருகின்றார்கள். மேலும் சில பெண்களை அங்கு அழைத்து வந்து விபச்சார நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறான சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாட்டினால் அங்கு உள்ள சிறுவர்கள் பெண்கள் நேரடியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். குறித்த நபருடைய பெறுப்பற்ற செயற்பாடு அங்குள்ள இளைஞர்களும் 

சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு தூண்டுவதாக அமைந்துள்ளது.  இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எயுடுத்து அப்பகுதி மக்களின் பாதுபாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி 

ஜே.169 கிராம சேவையாளர் சங்காணை பிரதேச செயரர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அப்பிரதேச மக்கள் அனைவரும் இணைந்து கையெப்பம் இட்டு 

முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு