தமிழ் எழுத தொியாத மாகாண கல்வி உதவி செயலாளாினால் சா்ச்சையில் சிக்கிய ஆளுநா், துாசண வாா்த்தைகளுடன் கடிதம்..

ஆசிரியர் - Editor I
தமிழ் எழுத தொியாத மாகாண கல்வி உதவி செயலாளாினால் சா்ச்சையில் சிக்கிய ஆளுநா், துாசண வாா்த்தைகளுடன் கடிதம்..

வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளாினால் கையொப்பமிடப்ப ட்டு வடக்கில் உள்ள சகல கல்வி வலயங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத் தில் பல்வேறு எழுத்து பிழைகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை (05.03.2019) வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளு க்கும் வடக்கு ஆளுநரினால் வழங்கப்பட்ட விடுமுறை தினத்தை முன்னிட்டு எதிர்வ ரும் சனிக்கிழமை பாடசாலை நடத்துவதற்காக 

கல்வி வலய பணிமனைகளுக்கு நேற்று வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் அ.சாந்தசீலனின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட கடிதத்தி லேயே எழுத்து பிழைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மாணவர்களையும், ஆசிரியர்களையும் வழிநடத்தும் கல்வி பணிமனைகளுக்கு கல்வி அமைச்சின் உதவி செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திலேயே இவ்வா றான எழுத்து பிழைகள் காணப்படுகின்றன.

எனவே கல்வி அமைச்சின் நிர்வாகத்தில் எவ்வாறான பிழைகள், தவறுகள் இடம்பெ றுகின்றன என்பதை இலகுவாக கிரகித்து கொள்ள கூடியதாக உள்ளது என கல்வியியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு