யாழ்.குடாநாட்டில் முகாமிட்டுள்ள அமொிக்கா, சீனா நாடுகளின் துாதவா்கள், என்ன காரணம்?
இலங்கைக்கான அமொிக்க மற்றும் சீனா ஆகிய நாடுகளின் துாதுவா்கள் ஒரே நேர த்தில் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரை யாடல்களை நடாத்தி வருகின்றனா்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகியுள்ள நிலையில், வடபகுதி மற்றும் குடாநாடு என்பனவற்றின் நிலமையை ஆராயும் நோக்கிலேயே இ ந்தப் பயணங்கள் அமைந்துள்ளன என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ், ஜெனீவா தீர்மான வ ரைவு குறித்து நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
மேலும், காணாமலாக்கப்பட்டோருக்கான தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. கடந்தகால போரால் பாதிப்புற்ற இலங்கையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும்
என்று வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் பலாலியில் புதிதாக விடுவிக்கப்பட்ட நிலங் களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பீ.டெப்லிட்ஸ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.