SuperTopAds

முகமாலையில் பயங்கர வெடிபொருட்கள் - அகற்ற 3 ஆண்டுகளாகும் என்கிறார் நோர்வே அமைச்சர்!

ஆசிரியர் - Admin
முகமாலையில் பயங்கர வெடிபொருட்கள் - அகற்ற 3 ஆண்டுகளாகும் என்கிறார் நோர்வே அமைச்சர்!

முகமாலைப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை 3 ஆண்டு காலப்பகுதிக்குள் அகற்றி முடிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மேரியன் ஹேகன் இன்று முகமாலைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

இன்று முற்பகல் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை அவர் பார்வையிட்டிருந்தார். நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இந்த பயணம் அமைந்துள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு மேரியன் ஹேகன் கருத்துத் தெரிவித்தபோது, இப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு 3 ஆண்டுகளிற்கு உதவ உள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் பிரதமரிற்கு நோர்வே அரசு வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் குறுகிய காலப்பகுதிக்குள் கண்ணிவெடி இகற்றி முடிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், மிகவும் பயங்கரமான வெடிபொருட்கள் அப்பகுதியில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.