நெடுங்கேணி பிரதேசசபையின் எஜமான் விசுவாசம், நிகழ்வை புறக்கணிக்கும் பிரதேசசபை உறுப்பினா்கள்..

ஆசிரியர் - Editor I
நெடுங்கேணி பிரதேசசபையின் எஜமான் விசுவாசம், நிகழ்வை புறக்கணிக்கும் பிரதேசசபை உறுப்பினா்கள்..

வவுனியா- வடக்கு நெடுங்கேணி பகுதியில் அம்மாச்சி உணவகம் ஒன்று அமை க்கப்பட்ட நிலையில், அதற்கு வன்னி அறுசுவையகம் என பெயா் மாற்றம் செய் து முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையாரை கொண்டு திறப்பு விழா ந டாத்த ஏற்பாடுகள் நடத்தப்படுகின்றது. 

இந்நிலையில் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளாின் நடவடிக்கையினை எதிா்த்து மேற்படி உண வகம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை. என பெரும்பாலான பிரதேசசபை உறுப்பினா்க ள் இன்று மாலை ஊடகங்களுக்கு தகவல் தொிவித்திருக்கின்றனா். 

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினா் துரைராசா தமிழ்செல்வ ன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,  வவுனியா வடக்கு பிரதேசபையின் கடந்த அமா்வில் மாகாணசபை ஊடாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்தை வவுனியா மாவட்ட செயலரை கொண்டு,

திறந்துவைப்பதென தீா்மானிக்கப்பட்டது. அந்த தீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்ட நிலையில், தீா்மா னத்தை மீறும் வகையில் பிரதேசசபையின் ஆழுங்கட்சியினா் குறிப்பாக தவிசாளா் பிரதேசபையின் தீா்மானத்தை மீறும் வகையில் “அம்மாச்சி” உணவகம் என்ற பெயரை மாற்றம் செய்து, 

“வன்னி அறுசுவையகம்” என பெயா் மாற்றம் செய்து முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா அம்மையாரை பிரதம விருந்தினராக அழைத்து திறப்பு விழா நாளை(இன்று) காலை நடாத்தப்படவிருக்கின்றது. முதலாவது பிரச்சினை பிரதேசசபையில் மாவட்ட செயலரை பிரதம விருந்திராக அழைப்பதென,

ஏகமனதாக எடுக்கப்பட்ட தீா்மானத்தை மீறியமை, மற்றும் அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்றம் செய்தமை இரண்டாவது பிரச்சினை. இந்த இரு பிரச்சினைகளுக்கும் ஆழும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே காரணம், அம்மாச்சி உணவகம் வடக்கில் பெரும் வெற்றியளித்த நிலையில், 

முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனும், அவருடைய அமைச்சா்கள் சிலரும் தமது கட்சியிலிருந்து விலகிச் சென்றமையை அடிப்படையாக வைத்துக் கொண்டு இவ்வாறான பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது அவா்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்தை காட்டுகின்றது. 

மேலும் பிரதேசசபையின் தீா்மானத்தை தவிசாளரும் அவருடைய கட்சி ஆதரவாளா்களும் மீறியமைக்கு பின்னாலும் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. எனவே அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் நாம் புறக்கணிக்க திட்டமிட்டிருக்கின்றோம் என்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு