இரு சமயங்களுக்கிடையில் பிளவை உண்டாக்கும் கொடுஞ்செயல், மாவை சேனாதிராஜா கண்டனம்..

ஆசிரியர் - Editor I
இரு சமயங்களுக்கிடையில் பிளவை உண்டாக்கும் கொடுஞ்செயல், மாவை சேனாதிராஜா கண்டனம்..

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சிவராத்திாி வளைவு உடைக்கப்பட்டமையா னது இந்து- கிறிஸ்த்தவ மக்களிடையில் பிளவை உண்டாக்கும் கொடுஞ் செயல் என கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சோ சேனாதிராஜா, 

மேற்படி சம்பவத்தை தாம் கண்டிப்பதாகவும், குறியுள்ளாா். குறித்த சம்பவம் தொடா் பாக அவா் இன்று ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்ட வாறு கூறியுள்ளாா். செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

இந்து மக்களின் புனித தினமான சிவன் இராத்திரி முதல் நாளன்று ஐந்து ஈஸ்வரங்க ளில் ஒன்றான புனித பூமி திருக்கேதீஸ்வரத்தில் அலங்கார வளைவு இடித்தழிக்கப்ப ட்டிருப்பது மிகுந்த மன வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சைவ மக்கள் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு முதன் நாளே இலட்சக்கணக்கில் குவிந்து விடுவர். சிவராத்திரியில் சிவனை இதயத்தில் வைத்துக் கண்விழித்து வழிபா டாற்றி அடுத்த நாள் விடிந்ததும் பாலாவி ஆற்றில் 

நீராடி சிவனை வழிபட்டு வீடு திரும்பும் சைவ மக்கள் ஆன்மீக ஈடேறும் திருத்தலம் தி ருக்கேதீஸ்வரம். அந்தப் புனித பூமியில் நிகழ்ந்த இக் கொடுஞ்செயலை ஏற்பட்ட பதட் ட நிலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வேதனையடைகின்றோம்.

இச் செயல் இந்து – கிருத்துவ மக்களிடம் வன்முறையை பிளவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடும் கொடிய செயலாகும். இச் செயற்பாடுகள் தொடர அனுமதிக் க முடியாது.

இச் செய்தி கிடைத்ததும் திருக்கேதீஸ்வர நிர்வாகிகளுடன் இந்துக் குருக்கள்மாருடன் கலந்து பேசினோம். மன்னார் ஆயர் கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. 

அதனால் அவருடன் பேச முடியவில்லை. திரு.சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற உ றுப்பினர் சம்பவம் இடம்பெற்ற மாந்தைச் சந்திக்கும்  திருக்கேதீஸ்வரப் பிரதேசத்தி ற்கும் சென்று சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசியுள்ளார்.

அமைதியைப் பேண முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங் கள் அதுவும் இந்து – கிருத்துவ மத நம்பிக்கை கொண்டு வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இடமளித்துவிடாமல் அனைத்து 

நீதியான சமாதான நடவடிக்கைகளையும் எடுக்க அனைவரும் உதவி ஒத்துழைக்க வேண்டும். மன்னார் ஆயர் மற்றும் கிருத்துவத் தலைவர்களும் சைவக் குருமார் தலைவர்களும் உடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் உதவ வேண்டும்.

பௌத்த ஆதிக்கத்திற்கும் தமிழ் இன அடக்குமுறைக்கும் ஆளாகியிருக்கும் தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் எம்மிடையே நல்லிணக்கம் மிக அவசியமாகும். 

இவை பாதுகாக்கப்பட வேண்டும். இன்றைய தேவை அதுவேதான் என்பதை வற்புறுத்தி நிற்கின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு