மோட்டாா் சைக்களில் பயணித்தவரை மோதி தள்ளிவிட்டு, தப்பி ஓடி வாகனத்தை ஒளித்துவைத்த சாரதி மாட்டினாா்..
மோட்டாா் சைக்கிளில் பயணித்தவரை மோதி தள்ளி 75 மீற்றா் துாரம் இழுத்து சென் ற நிலையில், காயமடைந்தவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்ற பட்டா சாரதி யை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சோி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி இரவு சாவகச்சேரிக்குச் சென்று விட்டு ஏ –9 முதன்மைச் சாலை யில் யாழ்ப்பாணம் திரும்பிய மோட்டார் சைக்கிளை கைதடி நுணாவில் பகுதியில் ஒழுங்கையொன்றிலிருந்து முதன்மை வீதிக்கு வந்த
பட்டா ரக வாகனம் மோதி 75 மீற்றர் தூரம் வரை இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப் பட்டது. பட்டா ரக வாகனம் சாரதி – காயமடைந்த தம்பதியை அவ்விடத்தில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட னர். விபத்து தொடர்பாக விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார் கைதடி நுணாவில் ரயர் நிறுவனத்துக்கு அருகில் உள்ள காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கைப்பற்றியதுடன் அதே இடத்தைச் சேர்ந்த
சந்தேக நபரையும் என்பவரையும் கைதுசெய்தனர். இந் நிலையல் கடந்த 26 ஆம் திகதி அவரை நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது, நீதிவான் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.