அரசை குற்றம் சொல்வதை காட்டிலும், இந்த அரசை நாங்களே கொண்டுவந்தோம். என மாா்தட்டியவா்களை குற்றம் சொல்லுங்கள்..
தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுவோம் என்றே இன்று ஆட்சி புரிபவர்கள் கூறி ஆட்சிக்கு வந்தார்கள் . ஆனால் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என ஈழ மக் கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித் துள்ளார்.
யாழில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அதே போன்றே இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என கூறுபவர்களும் இது வரை எதுவும் செய்யவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலை காணி விடுவிப்பு காணாமால் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றே மக்கள் நம்பி வாக்களித்தார்கள்.
ஆனால் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் போராடாடிக்கொண்டே இருக்கின்றார்கள்.
இதே போன்றே மாகாண சபையில் தாம் ஆட்சி அமைத்தால் அதை பெற்றுக்கொள்வோம், இதை பெற்றுக்கொள்வோம் என கூறி வந்தார்கள். இன்று அவர்களே வடமாகாண சபை ஐந்து வருடத்தை வீணாக்கி விட்டார்கள் எனவும் தமது அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் என
எங்களை பொறுத்தவரையில் எவர் மத்தியில் ஆட்சி புரிந்தாலும் , தமிழ் மக்களுக்கு என்ன தேவையோ அதனை பெற்றுக்கொடுக்க முனைவோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளும் கட்சிகளின் சந்திப்பில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சந்திப்பு நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் இராணுவத்தினர் கைகளுக்கு வந்த போது , மக்கள் மீள்குடியேறிய போது நாமும் யாழ்ப்பாணம் வந்தோம். அதன் போது யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரச்சனைகள் இருந்த போது ,
முதல் முதல் நாமே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தை உருவாக்கினோம். பின்னர் அது வேறு ஆட்களின் கைகளில் போயுள்ளது.
மற்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் போல வெளிநாட்டில் இருந்தோ , கிரிக்கெட் பார்த்துட்டு வரவில்லை. எனது தங்கையே போராட்டத்தில் மரணத்த முதல் பெண் போராளி , எனது தம்பி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் என்னுடன் நெருக்கமாக இருந்த பலர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர். அதன் வலிகளை உணர்ந்தவன் நான். இதற்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகள் , பிரச்சனைகளை தீர்க்க விரும்பவில்லை. அதனாலையே நான் அவர்களில் இருந்து வேறுபடுகின்றேன்.
இனி வரும் தேர்தலில் அவ்வாறன தலைமைகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
நிலைமாறு கால நீதியை பெற முதலில் உண்மைகளை கண்டறியப்பட வேண்டும். அதனால் யுத்ததிற்கு காரணம் என்ன என்பதனை 1983 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும்.
சம்பந்தன் நேற்று சொல்லுகிறார் பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்றால் மீண்டும் ஆயுதம் தூக்க வேண்டி வரும் என , பிரச்சனைகளுக்கு தீர்வு வந்து விட்டது என ஆயுதங்கள் கீழே வைக்கப்படவில்லை.
வலோத்காரமாக ஆயுதங்களை ஏந்தினோம். வலோத்காரம் காரணமாகவே ஆயுதங்களையும் கீழே வைத்தோம்.
இனப்பிரச்சனைக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வை பெற்று இருக்க முடியும். ஆனால் பெறப்படவில்லை. நீங்கள் ஏன் தீர்க்கவில்லை என என்னிடம் கேட்கலாம். விரலுக்கு ஏற்றதே வீக்கம் எமது கட்சிக்கு ஒரு ஆசனமே கிடைத்தது.
மற்றைய தமிழ் கட்சிகளுக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும் நாம் தனித்து போட்டியிட்டே ஒரு ஆசனத்தை பெற்றோம். அவர்களால் அவ்வாறு தனித்து போட்டியிட முடியாதவர்களாக உள்ளனர்.
அதேவேளை அண்மையில் கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தில் மக்கள். எழுச்சி கொண்டதை பொறுக்க முடியாது , அதனை குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
OMP ய அரசாங்கம் சரியாக செயற்படுத்தவில்லை என அரசாங்கத்தை குறை கூறுவதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தோம் என கூறுபவர்கள் அதனை செயற்படுத்த அழுத்தம் கொடுத்திருக்கனும். என தெரிவித்தார்.