நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை! மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மறந்தால் பேராபத்து..
நாட்டில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மறந்து செயற்பட்டால் மீண்டும் ஒரு பேராபத்து உருவாகுவதை தவிர்க்க முடியாது. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமா ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,
கொரோனாத் தொற்று மீண்டும் பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறான நிலைமை ஏற்படாமல் இருப்பதனை அனைவரும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாக சுகாதார சட்டங்களைப் பின்பற்றிச்
செயற்படுமாறும் நாட்டு மக்கள் அனைவரிடமும் அவர் கேட்டுக்கொண்டார். இதுவரையில் நாட்டில் கொரோனத் தொற்று ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.