இலங்கைக்கு எதிராக ரி-20 தொடருக்கான இங்கிலாந்து அணி ரெடி!! -6 வருடங்களுக்கு பின் அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ்-

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு எதிராக ரி-20 தொடருக்கான இங்கிலாந்து அணி ரெடி!! -6 வருடங்களுக்கு பின் அணியில் இடம்பிடித்த கிறிஸ் வோக்ஸ்-

இலங்கை அணியுடனான ரி-20 போட்டியில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விiயாட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 ரி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் முதல் போட்டி ஜீன் 23 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி 24 ஆம் திகதியும், 3 ஆவது மற்றும் கடைசி போட்டி 26 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. 

இப் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

1. மோர்கன் (அணித்தலைவர்) 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. சாம் பில்லிங்ஸ், 5. ஜோஸ்ட் பட்லர், 6. சாம் கர்ரன், 7. டாம் கர்ரன், 8. லியம் டாசன், 9. கிறிஸ் ஜோர்டான், 10. லியம் லிவிங்ஸ்டோன், 11. தாவித் மலான், 12. அடில் ரசித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே, 15. கிறிஸ் வோக்ஸ், 16. மார்க் வுட்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு