SuperTopAds

கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் நிறைமதி நாளையொட்டி நான்கு சிறப்பு நிகழ்வுகள்

ஆசிரியர் - Editor II
கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் நிறைமதி நாளையொட்டி நான்கு சிறப்பு நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பூரணை தினத்தினை முன்னிட்டு, நான்கு  நிகழ்வுகள் ஒரு சேர இடம்பெற்றன 

பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வருக்கான பிரார்த்தனை , அண்மையில் ஓய்வு பெற்ற வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவனுக்கு மதிப்பளித்தல் , அண்மையில் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் யாழ்  மாவட்ட நிலையில் முதன்மை பெற்ற மாணவர்களை கௌரவித்தல் மற்றும் தென்னாடு சஞ்சிகையின் 57 ஆவது இதழ் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. 

நிகழ்வில் சந்திரமெளலீசன் லலீசன் இலட்சுமணன் இளங்கோவன் தென்னாடு முதல் இதழினை வழங்கி -  தென்னாட்டின் ஐம்பத்து ஏழாவது திங்கள் இதழை வெளியிட்டு வைத்தார். 

அதனை தொடர்ந்து உயர்தரப் பரீட்சையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களிற்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

 உயிரியல் பிரிவில் முதல் இடம்பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன்  யமுனானந்தா  பிரணவன், இரண்டாம் இடம் பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன்  யமுனானந்தா சரவணன், வணிகப் பிரிவில் முதல் இடம்பெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன்  விஜயசுந்தரம் வருணன், கலைப் பிரிவில் முதல் இடம்பெற்ற வேம்படி மகளிர் கல்லூரி மாணவி  மணிவண்ணன் மயூரா ஆகியோர்  கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுகளில் ஓய்வுபெற்ற வடமாகாண பிரதம செயலாளர்  இலட்சுமணன் இளங்கோவன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர்  சந்திரமெளலீசன் லலீசன்  , யாழ்ப்பாணம் சிற்றி காட்வெயார் தொழிலதிபர்  சோமசுந்தரம் பிரகதீஸ்வரன் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.