SuperTopAds

ஹக்கீம் காங்கிரஸுக்கு உதவி செய்ய வேண்டாம்.-ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்

ஆசிரியர் - Editor III
ஹக்கீம் காங்கிரஸுக்கு உதவி செய்ய வேண்டாம்.-ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்

 ஹக்கீம் காங்கிரஸுக்கு உதவி செய்ய வேண்டாம்.-ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளை எமது மக்கள் தற்போது நம்புவதில்லை.இவர்களது இவ்வாறான  கோமாளித்தனமான பேச்சுக்களை எமது மக்கள் கேட்பதற்கு தயார் இல்லை.தேசிய மக்கள் சக்தி கட்சியின்  ஆட்சியை குழப்பினால் எமது நாட்டுக்கும் எமது சமூகத்திற்கும் நல்லதல்ல என்று நினைக்கின்றேன்.ஹக்கீம் காங்கிரஸுக்கு உதவி செய்வதை விட ஜனாதிபதி இருக்கின்ற  தேசிய மக்கள் சக்திக்கு  ஆட்சி  அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஏ.சி. எஹியாகான் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட  செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதேமேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அங்கு கருத்து தெரிவித்த அவர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரச்சார மேடைகளை எமது மக்கள் தற்போது நம்புவதில்லை.அவர்கள் அந்த மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று கூட   மக்கள் கேட்பதில்லை.ஹக்கீம் காங்கிரஸ் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவை மேடைகளில் மட்டந்தட்டுவது  சாய்ந்தமருது மக்களை கொச்சைப்படுத்துவது போன்ற ஆகும்.அது தான் இவர்களது வங்குரோத்து  நிலைமையாகும்.பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்கள்  ஒரு அரசியல் சதி காரணமாக தோற்கடிக்கப்பட்டவர்.பின்னர்  அவரது தேசிய மக்கள் சக்தி கட்சியானது  அவரை கௌரவப்படுத்தியும்.  அவரது ஊரினை கௌரவித்தும் அவரது  மாவட்டத்தினை கௌரவித்தும்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தது.

எனவே தான் அப்பாராளுமன்ற உறுப்பினரை  வைத்து எமது தேவைப்பாடுகளை செய்வதற்கு  நாங்கள் எத்தனிப்பதா அல்லது  அவரை குறை கூறி மட்டந்தட்டுவதா என்பதை சம்பந்தப்பட்ட ஹக்கீம் காங்கிரஸார் முடிவு செய்ய வேண்டும்.இது மாத்திரமல்ல ஹக்கீம் காங்கிரஸ் தலைவர்  அவர் ஒரு சட்டத்தரணி  என்று கூறுகிறார்கள். ஆனால் அவர் கூறுகின்ற வார்த்தைகள் அவர் மேடைகளில் பேசுகின்ற வார்த்தைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. அவருடைய இவ்வாறான  வார்த்தைகளை நான் கண்டிக்கின்றேன்.அது போன்று அண்மையில் உள்ளுராட்சி தேர்தல் கால பிரச்சார மேடையில் கூட   சஜித் பிரேமதாசவின் கட்சி செத்துப் போய்விட்டதாக கூறுகின்றார்.அதையும் நான் கண்டிக்கின்றேன். இவ்விடயம் தொடர்பாக சஜித் பிரேமதாசவின்  கட்சி பிரமுகரை சந்தித்து பேசி இருந்தேன். இது எல்லாம் நடிப்பு என்று கூறி  அவர் உண்மையான விடயம் அல்ல மேடைப்பேச்சுகளில் இதெல்லாம் சகஜம் என்று  கூறி இருந்தார்கள்.அதாவது அந்த கட்சிக்கு ஏசிக் கொண்டு கிழக்கு மாகாணத்தில்  வாக்கு சேகரிக்கின்ற முயற்சியில் ஹக்கீம் காங்கிரஸ்  ஈடுபடுகிறார்கள்.இவர்களது இவ்வாறான  கோமாளித்தனமான பேச்சுக்களை எமது மக்கள் கேட்பதற்கு தயார் இல்லை.தேசிய மக்கள் சக்தி கட்சியானது நாம் விரும்பியும் விரும்பா விட்டாலும்   5 வருடங்கள் இந்நாட்டில்  ஆட்சி செய்யத்தான் போகின்றது.அவர்கள் எந்தச் செலவினையும் செய்யாது கடந்த கால தேர்தல்களில்  பெரும்பாலான உறுப்பினர்களை பெற்றிருக்கிறார்கள்.எனவே அவர்களது ஆட்சியை குழப்பினால் எமது நாட்டுக்கும் எமது சமூகத்திற்கும் நல்லதல்ல என்று நினைக்கின்றென். தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு  ஆட்சி அமைப்பதற்கான உதவிகளை நாங்கள் செய்ய வேண்டும்.

ஹக்கீம் காங்கிரஸுக்கு உதவி செய்வதை விட ஜனாதிபதி இருக்கின்ற  தேசிய மக்கள் சக்திக்கு  ஆட்சி  அமைப்பதற்கு உதவி செய்ய வேண்டும். அதே போன்று அக்கரைப்பற்று மண்ணை ஒரு  கொழும்பு போன்று நகரமாக மாற்றி அமைத்துள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்  அதாவுல்லாஹ் அவர்களை பலப்படுத்த வேண்டும்.அதேபோன்று பொத்துவில் பகுதி மக்கள்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முசாரப் அவர்களை பலப்படுத்த வேண்டும்.அவரை  அவரது ஊர் மக்கள்  ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அரசாங்கத்தை விமர்சித்து கொண்டு இருப்பதனால்  எதுவுமே நடக்கப் போவதில்லை .இன்னும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கம் இருக்கத்தான்  போகின்றது .அபிவிருத்திகள் யாவும் இனிவரும் காலங்களில் தான் நடக்க இருக்கின்றது என அமைச்சர் விமல் ரத்னாயக்க தெரிவித்து வருகின்றார். அவர்களை ஆறு மாதமோ அல்லது  இரண்டு மாதங்களோ எதிர்த்துக்கொண்டு  எம்மால் எதுவும் செய்ய முடியாது. அதாவது தேசிய மக்கள் சக்தி குறைவாக ஆசனங்களை பெற்றுள்ள பகுதிகளில் அவர்களுடன்  இணைந்து   ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சியை விட்டாவது  அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.