SuperTopAds

யாழ் மாவட்ட செயலகத்தில் வெசாக் நிகழ்வு

ஆசிரியர் - Editor II
யாழ் மாவட்ட செயலகத்தில் வெசாக் நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாகவிகாரை விகாராதிபதி மீஹாஹ ஜந்துறே ஸ்ரீவிமல தேரோ கலந்துகொண்டு வெசாக் தினம் தொடர்பாக ஆசியுரை வழங்கினார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத், மாவட்ட மேலதிக செயலர் (காணி) க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்  இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டனர்.