வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கடலை அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கடலை அன்னதானம்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பிரதான வீதியில் மாபெரும் கடலை அன்னதானம் இன்று (12) மாலை 4 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் இப்னு அசார் ஆலோசனைக்கமைய சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜெயலத் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தானம் வழங்கினர்.இதன் போது வீதியினால் சென்ற அதிகளவான பொது மக்களுக்கு தேனீர் குளிர்பானம் என்பனவற்றை தானமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை சவளக்கடை பொலிஸ் நிலையம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையம் என்பனவும் வெசாக் தின நிகழ்வினை முன்னிட்டு பல ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன் ஏராளமான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதே வேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பொலிஸ் நிலையங்கள் வைத்தியசாலைகளிலும் வெசாக் வெளிச்ச கூடுகள் பரவலாக காட்சி படுத்தப்பட்டிருந்தன.