SuperTopAds

கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு

ஆசிரியர் - Editor III
கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு

கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு கல்முனை தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு இன்று (12) பொலிஸ் நிலையத்தின் முன்றலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்ததோடு, பொதுமக்களுக்கு அன்னதானத்தினையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி  ஆர்.ஏ.டி.எஸ்.ரத்நாயக்க  உட்பட இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் தலைமை அலுவல கத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.