சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு

சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த விசேட வெசாக் தின நிகழ்வு பொலிஸ் நிலைய வளாகத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டவர்கள் மற்றும் வீதியால் பயணித்த பயணிகள் உள்ளிட்டோர்களுக்கு மரவள்ளிக் கிழக்கு அன்னதான (தன்ஸல் ) வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வேப்பையடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி,மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தில் வெசாக் கூடுகள் கட்டப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.