SuperTopAds

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றியவர் உயிரிழப்பு

ஆசிரியர் - Editor II
பலாலி இராணுவ முகாமில் பணியாற்றியவர் உயிரிழப்பு

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு  உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். 

கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

அதனை அடுத்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.