SuperTopAds

கைக்குழந்தையுடன் வீதி போக்குவரத்து கடமை!! -பெண் பொலிஸ் அதிகாரியின் மெய்சிலிர்க்கும் நடத்தை-

ஆசிரியர் - Editor II
கைக்குழந்தையுடன் வீதி போக்குவரத்து கடமை!! -பெண் பொலிஸ் அதிகாரியின் மெய்சிலிர்க்கும் நடத்தை-

சண்டிகர் போக்குவரத்து பெண் பொலிஸான பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் வீதியில் நின்று கடமை செய்யும் வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

குறித்த பெண் பொலிசுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. 6 மாத மகப்பேறு விடுமுறைக்கு பின் கடந்த 3 ஆம் திகதி அவர் தனது கடமைக்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் கடந்த 5 ஆம் திகதி அவர் சண்டிகர் பகுதியில் வீதிப் போக்குவரத்து கடமைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு அவர் வீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ளார். 

இந்த வீடியோவை அவர் கடமையில் ஈடுபட்ட வீதிகளில் சென்ற சாரதிகள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதவிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.