நீண்ட விடுமுறையின் பின்னர் அம்பாறையில் பாடசாலைகள் அனைத்தும் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமானது
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நீண்ட விடுமுறையின் பின்னர் இன்று(10) ஒரே தடவையில் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் வழமை போன்று கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கொவிட்19 தொற்றுநோய் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கல்வியமைச்சு கடந்த 2020.07.28இல் புதிய சுற்றுநிருபமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
மேற்படி இரண்டு பக்க சுற்றுநிருபத்தில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தல்இ எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைக்கும் நடைமுறைவிதிகள்இ இடைவேளை எவ்வாறு அமைதல் வேண்டும்இ கல்விப் பணிக்குழுவினர் வகுப்பறை முகாமைத்துவம்இ, கல்விசாரா ஊழியர்களின் கடமைகள், பரீட்சைகள் என்பன பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் கல்முனை சம்மாந்துறை உள்ளிட்ட கல்வி வலயங்களில் பாடசாலை மாணவர்கள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வகுப்பு ரீதியாக பாடசாலை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது.
இதற்கமைய தரம் 5, 10, 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய வகுப்புக்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.