SuperTopAds

இலங்கை மீது இலங்கையின் ஆதரவு நாடுகள் கவலை..! நெருக்கடியை சந்திக்கும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
இலங்கை மீது இலங்கையின் ஆதரவு நாடுகள் கவலை..! நெருக்கடியை சந்திக்கும் அபாயம்..

இலங்கை அரசாங்கம் சா்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேகம் போதுமானதாக இல்லை. என ஐ.நா மனித உாிமைகள் பேரவையில் இலங்கைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. 

அத்தோடு, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத் தளபதியாக நியமித்திருப்பதானது, நல்லிணக்க முயற்சிகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது கூட்டத்தொடரில், இணை அனுசரணை நாடுகளின் சார்பாக, பிரித்தானிய பிரதிநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, 

மொன்ரெனிக்ரோ மற்றும் பிரித்தானியா சார்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான இணை நாடுகள் குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த அறிக்கையில், ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பேரவையின் இணைத் தீர்மானம் 30/1 இன் மூலம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக 

பரந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்கான உரிமையை இலங்கை எடுத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளாகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40/1 தீர்மானத்தின் மூலம், 

இலங்கை இந்த வாக்குறுதிகளை மீள் உறுதி செய்தது.இவை தேசிய நல்லிணக்கம், உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என்று இணை அனுசரணை குழு நம்புவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வெற்றிபெற இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு முக்கியமானதாக இருக்கும். எனினும் பல பகுதிகளில் முன்னேற்றத்தின் வேகம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் இவை அதிகாரத்துவ 

கட்டுப்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மிக அண்மைய தீர்மானத்தில், இலங்கையின் தேசிய நடைமுறைப்படுத்தல் மூலோபாயத்தின் மூலம், இதற்கான நடவடிக்கைக்கு தெளிவான கால எல்லையுடன் செயற்பட பேரவை ஊக்கமளித்தது.

இதற்கு இலங்கை முன்னுரிமை அளிக்கும் என்றும் நம்புவதாக பிரித்தானியாவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்தோடு, லெப்டினன் ஜெனரன் சவேந்திர சில்வாவை இலங்கை இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, 

நல்லிணக்க முயற்சிகளை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையில் தொடர்ந்தும், இந்த சபையும் அனைத்துலக சமூகமும் 

இலங்கைக்குத் தேவையான கவனத்தையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.