இழி நிலையை பாருங்கள்..
வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் கிராமத்தில் காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படும் நடவடிக்கைகள் மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலை யில், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. என வவுனியா வடக்கு பிர தேச செயலா் அறிக்கையிட்டிருக்கின்றாா்.
சிங்களக் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று நேரில் பார்த்த வர்கள் மூலமும், ஒளிப்படங்கள் மூலம் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் வவுனி யா வடக்குப் பிரதேச செயலகம் இவ்வாறு அறிக்கையிட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்ப டுத்துகின்றது என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
திட்டமிட்ட செயல்
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த எல்லைக் கிராமங்க ளைத் திட்டமிட்ட வகை யில் பெளத்த மயமாக்கும் நடவடிக்கைகள் தற்போது அதிகரித்துள்ளன. முல்லைத் தீவு, செம்மலையில் உள்ள நீராவிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அண்மையில் நீதிமன்ற உத்தரவையும் மீறிப் புத்தர் சிலை நிறுவப்பட்டிருந்தது.
அதைப்போன்றே வவுனியாவில் ஊற்றுக் குளத்தை அடுத்துள்ள கச்சல் சமனங்குளத் தையும், அதை அண்டிய பகுதிகளையும் பௌத்த மயமாக்கி சப்புமல்கஸ்கந்த என்று பெயர்மாற்றி சிங்களக் குடியேற்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என் று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
தமிழர் பூர்வீகக் கிராமம்
நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள ஊற்றுக்குளம் கிராமத்தில் தமிழ் மக்கள் பூர் வீகமாக வாழ்ந்து வந்தனர். போர் காரணமாக அவர்கள் இடம்பெயர்ந்தனர். இன்ன மும் அங்கு மீளக் குடியமராதபோதும், அங்கு விவசாய நடவடிக்கைகளை மேற் கொ ண்டு வருகின்றனர்.
தற்போது ஊற்றுக்குளம் கிராமத்தில் திடீரெனப் புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள் ளதுடன் குளம் ஒன்றும் புதிதாகக் கொட்டில்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் இரகசியமாக, முழுவீச்சில் நடைபெறுகின் றன என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
இந்த விடயத்தைப் பிரதேச மக்கள் நெடுங் கேணிப் பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். நெடுங்கேணிப் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆராய்ந்தனர். இது தொடர்பாகக் கருத்துத் தெ ரிவித்திருந்த சபையின் தவிசாளர் தணிகாசலம்.
“அந்தப் பகுதியில் 200 ஏக்கருக்கு நீர் வழங்கக் கூடிய வகையில் குளம் ஒன்று அமைக் கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி தமிழர்கள் வாழ்ந்த நிலங்கள்தான். அங்கு 2 அடிக்கும் உயரமான புத்தர் சிலை ஒன்று நிறு வப்பட்டுள்ளதுடன் பௌத்த பிக்கு ஒருவரும் உள் ளார். அவருக்கு இரு காவலாளிகளும் உள்ளனர்.
சிலைக்குச் செல்லும் இரு பக்கமும் சிறிய கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந் தப் பகுதியில் சிங்களக் குடியேற் றத்தை உருவாக்க முயற்சிக் கப்படுகின்றது என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசிடம் பேச வேண்டும்.
நாங்கள் இது தொடர்பாகப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரவுள்ளோம்.”- என்று கூறியிருந்தார்.
எதுவும் இல்லை
இந்த விடயம் தொடர்பாக மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் க டந்த மாதம் மாவட்டச் செயலரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விடயம் தொடர் பில் ஆராய்ந்து உண்மைத் தன்மையை அறிக்கையிட வேண்டும் என்று வவுனியா வ டக்குப் பிரதேச செயலரிடம், வவுனியா மாவட்டச் செயலர் கோரியிருந்தார்.
அது தொடர்பில் தற்போது பிரதேச செயலர் அறிக்கையிட்டுள்ளார். அந்தப் பகுதியில் காடு துப்புரவு செய்தமை தொடர்பில் எவரும் தகவல் தெரிவிக்கவில்லை. அங்கு ஆரா யச் சென்ற போது அங்கு எவரும் இருக்கவில்லை. அங்கே இடம்பெறும் குள அபிவி ருத்தி தொடர்பாகவும்,
புத்தர் சிலை தொடர்பாகவும் தரவுகள் கிடைக்க வில்லை என் றும் அவர் அறிக்கை யிட்டுள்ளார்.
மக்கள் சந்தேகம்
மகாவலி அதிகார சபையும், வன வளத் திணைக்களமும் இதற்கு உடந்தை என்று மக் கள் கூறுகின்றனர். வவுனியா, எல்லைக் கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கு மீளக் குடிய மரும்போது அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு வன வள த் திணைக்களம் தடை போடுகின்றது.
மக்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குத் தாக் கல் செய்கின்றது. ஆனால் இவர்கள் கா டுகளை அழித்து குடியேற்றங்க ளைச் செய்யும்போது மௌனமாக வேடிக்கை பார்க் கின்றது என்று பிரதேச மக்கள் கடும் விசனம் வெளியிட்டனர். இப்போது வவு னியா வடக்குப் பிரதேச சபை மாவட்டச் செயலகத்துக்கு வழங்கியுள்ள
அறிக்கையும் இந்தச் சந்தேகத்தை அதிகப்படுத்துகின்றது என்கின்றனர் பிரதேச மக் கள்.
என்ன நடக்கிறது?
மக்கள் தமது பூர்வீக நிலங்கள் பறிபோகின்றன என்று அச்சம் தெரிவித்துள்ளனர். அ திகாரிகளோ அவ்வாறு நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் நேரில் சென்று பார்த்த பிரதேச சபை உறுப்பினர்கள், அங்கு குள அபிவிருத்தி நடைபெறுகின்றது என்றும், புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறுகின்றனர்.
ஒளிப்படங்களும் வெளியாகியிருந்தன. மக்கள் பொய் கூறுவதற்கான தேவைப்பாடு கள் எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலை மைகள் நேரடியாகக் களமிறங்கி, சிங்களக் குடியேற்றத்துக்கான இரகசிய வேலைத் திட்டங்கள் நடைபெற்றால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
எல்லைக் கிராமங்க ளைப் பாதுகாப்பதன் மூலமே எமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு விரைந்து செயலாற்ற வேண்டும் என் று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.