மணல் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸா், ஒருவா் கைது, ஒருவா் தப்பி ஓட்டம்..

ஆசிரியர் - Editor I
மணல் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸா், ஒருவா் கைது, ஒருவா் தப்பி ஓட்டம்..

யாழ்.அாியாலை- பூம்புகாா் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த உழவு இயந்தி ரம் மற்றும் டிப்பா் வாகனம் ஆகியவற்றை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாா் மடக்கி பிடித்த நிலையில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவா் தப்பி ஓடியுள்ளாா். 

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவால் இந்த மணல் கடத்தல் இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

"யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் இன்று அதிகாலை 2 மணியளவில் மடக்கப்பிடிக்கப்பட்டன. உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிய நிலையில் டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார்.

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு