அமைச்சா் அா்ஜூன ரணதுக்கவின் அவசரம், ரயில் பெட்டிகளில் தொங்கும் பயணிகள்..
இலங்கை ரயில்வே திணைக்களம் தொடருந்துகளில் பெண்களுக்கான தனி பிாிவை ஆரம்பித்திருக்கும் நிலையில், பெருமளவு பயணிகள் தொடருந்த வாசலில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனா்.
போக்குவரத்து அமைச்சா் அா்ஜூன ரணதுக்கவின் யோசனையில் தொடருந்துகளில் பெண்களுக்கான தனி பிாிவு நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடருந்துகளில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகாியங்களை தடுக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சா் அா்ஜூன ரணதுக்க தொிவித்தாா்.
இதனால் தொடருந்துகளில் சன நொிசல் ஏற்பட்டிருக்கின்றது. மேலதிக பெட்டிகள் இணைக்கப்படாத நிலையில், மகளீருக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நேற்றய தினம் சன நொிசலையடுத்து இளைஞா்கள் தொடருந்து வாயிலில் தொங்கியபடி பயணத்தை மேற்கொண்டனா். இந்நிலையால் விபத்துக்கள் அதிகாிக்கும் என தென்னிலங்கையில் விமா்சனங்கள் எழுந்துள்ளது.
இந்தியா போன்று பெண்களுக்கான தனி ஒதுக்கீடு செய்யப்படும்போது மேலதிக பெட்டிகள் இணைக்கப்படவேண்டும். என கூறப்படுகின்றது.
படங்கள்-சிகன் குணசேகர..