விபத்தில் சிக்கிய "சாவா குழு" ரவுடி, 5 மணித்தியம் கடந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ்..
கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கச்சாய் அம்மன் கோவிலடியைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் சாரதி, தென்மராட்சி "சாவக்குழு" வாள் வெட்டுக் கோஸ்ரியின் தலைவர் என அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள வீதியில் 800 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற விபத்து ஐந்து மணித்தியலங்களாயும் பொலிஸாருக்கு த் தெரியாதாம்.
விபத்து நண்பகல் 12. 30 மணியளவில் இடம்பெற்று சுமார் ஐந்து மணித்தியாலங்களின் பின்னரே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
அது வரை விபத்திற்குள்ளான துவிச்சக்கரவண்டி நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே மீட்க்கப்பட்டது கருந்துள்ளது. துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்.
விடுமுறை நேரத்தில் பழைய இரும்பு , போத்தல்கள் சேகரித்து விற்பனை செய்து வருபவர். அவ்வாறு சேகரித்த பொருட்களை மூட்டை கட்டியவரே பயணித்த நிலையில் விபத்துக்குளாகியுள்ளார்.
விபத்துக்குள்ளாகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் யாரும் உடனடியாக மீட்க முன்வரவில்லை. இதனால் கொழுத்தும் வெயிலில் வெகு நேரம் விபத்துக்கு உள்ளானவர்கள் கிடந்துள்ளார்கள்.
பின்னர் ஆட்டோ ஒன்றில் ஏற்றப்பட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதே வேளை விபத்து இடம்பெற்று பொலிஸார் சம்பவ இடத்திற்கு செல்லும் முன், விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை இருபது பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
விபத்தில் சிக்கிய துவிச்சக்கரவண்டி துண்டு துண்டாக சிதறிய நிலையில் மீட்டுச் சென்றுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.