SuperTopAds

வீட்டுதிட்டத்தில் அரசியல் செய்த துணுக்காய் பிரதேச செயலகம், பதறியடித்துக் கொண்டு வீட்டுதிட்டம் வழங்கினா். காரணம் தொியுமா?

ஆசிரியர் - Editor I
வீட்டுதிட்டத்தில் அரசியல் செய்த துணுக்காய் பிரதேச செயலகம், பதறியடித்துக் கொண்டு வீட்டுதிட்டம் வழங்கினா். காரணம் தொியுமா?

முல்லைத்தீவு- துணுக்காய் பிரதேச செயலா் பிாிவில் வாழும் முன்னாள் போராளி ஒரு வருக்கு அப்பகுதி கிராமசேவகா் திட்டமிட்டு வீட்டுதிட்டம் வழங்காமல் இருந்துள்ளாா். இந்நிலையில் குறித்த முன்னாள் போராளி சாகும் வரையில் உணவு தவிா்ப்பு போராட் டம் நடத்தப்போவதாக கூறியிருந்தாா். 

இதனையடுத்து இந்த விடயத்தில் மனித உாிமைகள் ஆணைக்குழு தலையிட்ட நிலை யில் குறித்த முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய கிராம அலுவலகருக்கு மாந்தை பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம அலுவலகர், துணுக்காய் பிரதேச செலயகத்தின் உதவித்திட்டமி டல் பணிப்பாளர் ஆகியோரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் போராளிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடு க்கப்பட்டுள்ளது.  விசாரணையின் இறுதியில் முன்னாள் போராளியின் வீட்டுத்திட்டத்தில் தொடர்புப்பட்ட கிராம சேவையாளருக்கு முறையாக மாந்தை கிழக்கு பிரிவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் 

முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்ற விசாரண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 

சட்டத்தரணியும் இணைப்பாளருமான ஆர்.எல்.வசந்தராஜாவினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.