ஒரு நாளில் இரு இராஜதந்திாிகளுடன் பேச்சு, வடக்கில் பொருளாதார மேம்பாடு குறித்து விதந்துரைத்த வடக்கு ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
ஒரு நாளில் இரு இராஜதந்திாிகளுடன் பேச்சு, வடக்கில் பொருளாதார மேம்பாடு குறித்து விதந்துரைத்த வடக்கு ஆளுநா்..

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் இன்று (07) சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பில் கௌரவ ஆளுநர் அவர்கள் விளக்கமளித்த துடன் இந்த மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கு 

சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இரு நாட்டு தூதுவர்களிடமும் கோரிக்கை விடுத்தார். அத்துடன் வடமாகாணத்தை கட்டியெழுப்ப வெளிநாட்டில் வாழும் 

இலங்கையர்கள் மற்றும் நிபுணர்களின் தேவைகள் குறித்தும் ஆளுநர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு