ஜெனீவாவில் நான் என்ன சொல்லவேண்டும் என்பதை என்னிடம் கூறுங்கள், மனம் திறந்தாா் வடக்கு ஆளுநா்..

ஆசிரியர் - Editor I
ஜெனீவாவில் நான் என்ன சொல்லவேண்டும் என்பதை என்னிடம் கூறுங்கள், மனம் திறந்தாா் வடக்கு ஆளுநா்..

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர்   பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்  மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து 

கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையி ன் கூட்டத்தொடரில்  முன்வைக்கவேண்டுமென கருதும் 

தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன் கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில்  இடம்பெறவுள்ள 

ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்க முடியும். பொதுமக்களின் நலன் கருதி  குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு