2178 மில்லியன் செலவில் புனரமைப்பு செய்தும் பயன் என்ன? ஊழல்வாதிகளால் தாற்பாியத்தை இழக்கும் இரணைமடு..
கிளிநொச்சி- இரணைமடு குளம் சுமாா் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளபோதும், குளத்திலிருந்து நீா் தொடா்ந்தும் வெளியாகிக் கொண்டிரு ப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
இக்குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2, 178 மில்லியன் ரூபாய் செலவில் புன ரமைக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதியால் விவசாயிகளிடம் கையளி க்க ப்பட்டது.
இரணைமடுக்குளத்திலிருந்து உருத்திரபுரம், முரசுமோட்டை, ஊரியான் போன்ற பகு திகளுக்கான நீர் விநியோக வாய்க்காலின் பிரதான கதவு உரிய முறையில் புனரமை க்கப்படாமையினால் இவ்வாறு நீர்வெளியேறி வருகின்றது எனவும்,
இவ்வாறு வெளியேறும் நீரினால் மூன்று நாட்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சிக்குளம் நிரம்பி வான் பாயும் அளவுக்கு காணப்படுகின்றது என விவசாயிகளினால் சுட்டிக்கா ட்டப்பட்டுள்ளது.
முரசுமோட்டை, பன்னங்கண்டி போன்ற பகுதிகளில் வயல் நிலங்களில் அதிகளவான நீர் வீண் விரயமாகிக் காணப்படுகின்றன எனவும் இது தொடர்பில் உரிய தரப்பினரி டம் முறையிட்டும் அவர்கள் பதில் வழங்க மறுத்துள்ளனர்
எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.