இரணைமடு அனா்த்தம் தொடா்பான விசாரணை குழு அறிக்கை, ஒரு பூச்சாண்டி மட்டுமே..

ஆசிரியர் - Editor I
இரணைமடு அனா்த்தம் தொடா்பான விசாரணை குழு அறிக்கை, ஒரு பூச்சாண்டி மட்டுமே..

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீா் வெளியேற்றத்தில் மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? என கண்டறிவதற்காக பிரதம செயலாி னால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையில் எந்தவிதமான முன்மொ ழிவுகளும் சமா்ப்பிக்கப்படவில்லை. என கூறப்படுகின்றது. 

வடக்கு மாகாண விவசாய , நீர்ப்பாசண , கால்நடை அமைச்சின் செயலாளர் ப.தெ ய்வேந்திரம் தலமையில் இடம்பெற்ற இரணைமடு நீர் வெளியேற்றத்தில் கைக்கொ ள்ள வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என கண்டறியும் நோக்கிலான வி சாரணை அறிக்கையே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2018-ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் திகதி ஏற்பட்ட மழை வீழ்ச்சியினால் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப் பெரிய குளமான இரணைமடுக் குளத்தில் அதிக நீர் வரத்து ஏற்பட்டபோது உரிய நடைமுறைகள் பின்பற்றவில்லை. என எழுந்த விமர்சனங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் 

ஒரு விசாரணைக் குழுவினையும் நியமித்திருந்தார். இதனால் நடந்த சம்பவங்களை திணைக்கள ரீதியில் கண்டறிவதற்காக பிரதம செயலாளர் என்ற வகையில் குறித்த அமைச்சின் செயலாளருக்கு பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உத்தரவிட்டிருந்தா ர். இதன் பிரகாரம் அமைச்சின் செயலாளர் தலமையிலான குழுவினர் 

மாவட்டச் செயலகம் , நீர்ப்பாசணத் திணைக்களம் மாவட்ட விவசாயிகள் உட்பட பலரிடம் தமது ஆரம்ப விசாரணைகளை நடாத்தியிருந்தனர். இவ்வாறு இடம்பெறும் விசாரணைகளின் அடிப்படையில் அதிக மழைவீழ்ச்சி ஏற்படும் சமயம் திணைக்க ளம் மற்றும் பொறியியலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் ஆயத்தப்பணிகள் , 

பொறியியலாளர்களது நிலமை , விவசாயிகளிற்கு அறிவுறுத்த வேண்டிய பணிகள் தொடர்பிலும் அவ்வாறான பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பவற்றுடன் அவற்றை மேற்கொள்ள உரிய கால அவகாசங்கள் இருந்தனவா என்பவை தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன் அறிக்கையில் எந்த இடத்திலும் எந்த திணைக்களமோ அல்லது எந்தப் பதவி உத்தியோகத்தர்மீதும் நேரடியா தமது கவனத்தை குரு கொண்னிராத்தோடு அதிக விடயங்களிற்கு துறைசார் வல்லுநர்கள் மற்றும் தொழில் நுட்ட அறிக்கையே பெற வேண்டும். 

என்றே காட்டப பட்டுள்ளதோடு சரி அல்லது தவறு எனக் குறிப்பிடப்படவில்லை. எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறித்த விடயம் தொடர்பில் அமைச்சின் செய லாளரும் குருவின் தலைவருமான ப.தெய்வேந்திரத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ,

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான மேல் நடவடிக்கையோ அல்லது இதேபோன்று ஆளுநரால் நியமித்த குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பு கருத்து தெரிவிப்பது உகந்த விடயம் அல்ல எனப் பதிலளித்ததோடு துறைசார் தொழில் நுட்ப அறிக்கை அதன் மூலமே கிடைக்கும். எனப் பதிலளித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு