SuperTopAds

3918 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவ கட்டுக்குள்,யாழ்.குடாநாட்டில் மட்டும்..

ஆசிரியர் - Editor I
3918 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் இராணுவ கட்டுக்குள்,யாழ்.குடாநாட்டில் மட்டும்..

யாழ்.குடாநாட்டில் 2009 போர் முடிவுற்ற சமயம் 14 ஆ யிரத்து 237 ஏக்கர் நிலம் படையினர் வசம் இருந்த நி லையில் போர் முடிந்து 10 ஆண்டுகள் கடந்து தற் போதும் 3 ஆயிரத்து 918 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினர் வசமே உள்ளது.

குடாநாட்டில் முப்படையினரின் வசம் 2009ஆம் ஆண்டு 14  ஆயிரத்து 237 ஏக்கர் நிலம் படையினர் வசமிருந்தது. இவ்வாறு காணப்பட்ட 14  ஆயிரத்து 237 ஏக்கர் நிலத்தில் மகிந்த ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதிவரையில் அதாவது 2014-12-31 வரையில் குடாநாடு முழுவதுமாக 6 ஆயிரத்து 320 ஏக்கர் நிலம் மக்களிடம் விடுவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சமயம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 7 ஆயிரத்து 918.22 ஏக்கர் நிலம் முப்படையினரின் வசம் தொடர்ந்தும் காணப்பட்டது. இவ்வாறு காணப்பட்ட 7 ஆயிரத்து 918.22 ஏக்கர் நிலத்தில் கடந்த 4 ஆண்டு காலத்திலும் மைத்திரி அரசினால் 

குடாநாட்டில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்  குடாநாட்டில் தற்போதும் 3 ஆயிரத்து 918 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது.

இவ்வாறு காணப்படும் 3 ஆயிரத்து 918 ஏக்கர் நிலத்தில் 3 ஆயிரத்து 642 ஏக்கர் தனியார் நிலமும் 275 ஏக்கர் அரச நிலமும் காணப்படுகின்றது. இதில் இராணுவத்தினர்வசம் 2 ஆயிரத்து 668.81 ஏக்கர் தனியார் காணிகளும் 112.5 ஏக்கர் அரச காணியும் கடற்படையினரின் வசம் 274.57 ஏக்கர் தனியார் காணியும் 162.26 ஏக்கர் அரச காணியும் கானப்படுகின்றது. 

இவ்வாறே விமானப் படையினர் வசம் 646 ஏக்கர் தனியார் காணியும் பொலிசாரிடம் 52.53 ஏக்கர் தனியார் காணியுமாகவே குறித்த 3 ஆயிரத்து 918 ஏக்கர் நிலம் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.