ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை சிதைக்கவே, திருக்கேதீஸ்வரத்தில் வன்முறை துாண்டப்பட்டது..

ஆசிரியர் - Editor I
ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை சிதைக்கவே, திருக்கேதீஸ்வரத்தில் வன்முறை துாண்டப்பட்டது..

திருக்கேதீஸ்வரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தமிழர் மரபுரிமை பே ரவை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்ப ட்டுள்ளதாவது.

இலங்கைத்தீவில் தமிழர் பூர்வீக வாழ் நிலங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகா ணங்களில் வாழும் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் தூரநோக்கு சிந்தனை யுடனும் செயற்பட வேண்டிய காலப்பகுதியாக சமகாலம் அமைந்துள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக வாழ்நிலங்கள் திட்டமிடப்பட்ட குடியேற்றங்களால் துண்டா டப்படும் முயற்சிகள், இப்பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலம் இனத் தொடர்ச்சியின்மையை ஏற்படுத்தி இப்பிரதேசங்களின் 

இனப்பரம்பல் கோலத்தை சிதைத்தளிக்கும் நடவடிக்கைகள் இதன் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக  பூர்வீகமாக வாழ்ந்து வரும் பிரதேசங்களில் தமிழ் மக் களின் அரசியல் பலத்தை உடைத்தெறியும் முயற்சிகள் 

நல்லாட்சி என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த அரசினால் துரித கதியில் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. தமிழர்களின் மரபுரிமைசார் பிரதேசங்களில் பௌத்தம தம் சார் வரலாறு நூற்றாண்டுகளுக்கு முன் தளைத்தோங்கி இருந்ததாக 

அரச இயந்திரமான  தொல்லியல் திணைக்களம் புனைகதைகளைப் பின்னி புத்தர் சிலைகளை நிறுவி பல்லாயிரம் வருடங்கள் தொன்மை வாய்ந்த எம்மரபுரிமையை திட்டமிட்டு சிதைத்து வருகின்றது. 

மகாவலி அதிகார சபை வனவள பரிபாலன திணைக்களம் போன்றனவும் தமிழ்மக் களின் பூர்வீக வாழ் நிலங்களை ஆக்கிரமிக்கும், பறித்தெடுக்கும் நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றன.

இவற்றிற்கு எதிராக தமிழ்மக்கள் ஒன்றுபட்டு குரல்கொடுக்கும் சம்பவங்கள் அண் மைக்காலங்களில் அதிகரித்து வருகின்றன. இவை ''நல்லாட்சி'' என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த அரசின் வேசங்களை களைந்து 

இவ் அரசு இன அழிப்பிற்கு நிகரான நடவடிக்கைகளை தமிழ்மக்கள் மீது பிரயோகிப் பதை சர்வதேச அரங்கில் பிரதிபலித்து வருகின்றன. இதனால் தான் அண்மைக்கா ல ங்களில் தமிழ் மக்களின் ஒற்றுமையை கூறு போடும் நடவடிக்கைகள் 

பல திரை மறைவில்  பல்வேறு அரசநேய, தமிழர்விரோத சக்திகளால் திட்டமிடப் பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக  முனைப்புற்றிருந்த கடந்த மூன்று தசாப்தங்களுக்கு 

மேலாக காலங்களில் எமது சமூகத்தில் காணாமல் போயிருந்த சாதியம், மத வேறு பாடுகள் பிரதேச வாதம் போன்ற நச்சுவிதைகள் தமிழர் சமூகத்தில் தூவப்பட்டு வேர் விட ஆரம்பித்துள்ளன. 

தமிழ் மக்களை பிரித்தாளும் தந்திரமாக இவ்வேறுபாடுகள் தீய சக்திகள் சிலவற்றா ல் தமிழ்மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்வெ ளிப்பாடே அண்மை நாட்களில் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நடைபெற்று 

முடிந்த மதமுறுகல் நிலைமை சமகாலப்பகுதியில் தமிழர்; தாயகப் பரப்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட மீறல் நடவடிக்கைகளை எதிர்த்துக்குரல் கொடுக்க ம் தமிழர் சமூகம் இந்து மற்றம் கத்தோலிக்க மார்க்கங்களை 

பின்பற்றுபவர்களையும் இம்மார்க்கங்களின் மதகுருமார்களையும் பெரும்பான்மை யாக கொண்டது என்பது கண்டறியப்பட்டு இச்சமூகத்தினரை இருகூறிட்டு எதிர்ப்பி ன் வலுவை மலினப்படுத்தும் முயற்சியாகவே இச்சம்பவம் 

தமிழ் விரோத சக்திகளால் கையிலெடுக்கப்பட்டு வருகிறது. மதவாதம் என்ற பிரித் தாளும் தத்துவத்தை உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடிக்கொண்டிருக்கும் தமிழர் மத்தியில் பிரயோகிக்கும் ஆரம்ப நடவடிக்கையாக 

திருக்கேதீஸ்வரம் சம்பவம் அமைந்துள்ளது வேதனைக்குரிய விடயமாகும். எனவே தமிழ் மக்கள் அனைவரும் இச்சம்பவம் தொடர்பில் மிகுந்த விழிப்புணர்வுடனும் பொ றுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். 

இரத்தத்தாலும் மகத்தான விலை கொடுப்புக்களாலும் மகத்தான தியாகங்களாலும் கட்டி எழுப்பப்பட்டு உன்னத நிலைமையை அடைந்துள்ள எமது விடுதலைப் போரா ட்டம் காலத்தின் கட்டாயத்தால் தமிழர்களாகிய ஒவ்வொருவரிடமும் 

பாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் கணமும் மறந்துவிடக்கூடாது. தமிழர் விரோத சக்திகளால் அடக்குமுறைக்கு எதிரான நம் குரலைமலினப்படுத்துவதற்காக திட்டமிடப்படும் நடவடிக்கைகளை உணர்ந்து, 

தெரிந்தோ தெரியாமலோ குறுகிய இலாபங்களுக்காக அவற்றிற்குவிலைபோகும், துணைபோகும் நிலைமையினை ஒவ்வொரு தமிழ்மகனும், தமிழ்மகளும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

படிப்படியாக எம் பூர்வீக தாய்நிலம் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதையும் எம் தாய் நிலத்தில் ஆழ வேரோடி உள்ள எம்மரபுரிமை திட்டமிட்டு சிதைக்கப்படுவதை யும் விழிப்புணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் அவதானித்து 

வற்றிற்கு எதிராக ஒற்றுமையுடன் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்பதுடன் தமிழரான எமக்குள் ஏற்படும் மாற்றுக் கருத்துக்களை இதய சுத்தியுடன் பேசித் தீர்த்துக்கொள்வதன் மூலம் எமது இன ஒற்றுமையை 

பேணிப்பாதுகாக்க அனைவரும் ஒன்றிணையுமாறு அன்புடனும் உரிமையுடனும் கே ட்டுக்கொள்கின்றோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு