SuperTopAds

வறட்சி காலங்களில் விவசாயிகள் குறித்து வாய் மூடி இருப்பவா்கள், இப்போது வாய் திறந்து பேசுவது ஆச்சாியமளிக்கிறது..

ஆசிரியர் - Editor I
வறட்சி காலங்களில் விவசாயிகள் குறித்து வாய் மூடி இருப்பவா்கள், இப்போது வாய் திறந்து பேசுவது ஆச்சாியமளிக்கிறது..

இரணைமடு குளத்தின் கீழ் 2017இல் 13அடி 3அங்குலமும் 2018இல் 14அடி 4அங்குலமும் நீர் தேக்கப் பட்ட நிலையில் நாம் 1/8 ஏக்கர், 1/4ஏக்கர் வீதம் வயல் செய்து . நாம்  கொடிய வரட்சிகளை சந்தித்த காலங்களைப் பற்றி வாய் திறவாத அதிகாரிகள் 

முதல் ஆர்வலர்கள்வரையில் 5 ஆண்டிற்கு ஒருமுறை பாயும் நீரை மட்டும் பேசுபொருளாக்குவது எமக்கு வியப்பளிக்கும் நிலையில் அச் செயலிற்கு ஆளுநரும் தூபமிடுவது விவசாயிகளை மேலும் வேதனையடையவே செய்கின்றது. 

என இரணைமடு விவசாய சம்மேளணச் செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.  குறித்த விடயம் தொடர்பில் இரணைமடு விவசாய சம்மேளணச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் குளத் திற்கு வருகை தந்த  ஆளுநர் அவர்களின் கலந்துரையாடலின் 

பின் வெளிவருகின்ற கருத்துக்கள் சில, விவசாய சமூகத்தினராகிய எமக்கு மனக் கஸ்ரத்தினை தருகின்றது. ஆனால் அவ்வாறான கருத்துக்களில் உண்மைத் தன்மையோ, நடைமுறைச் சாத்திய மோ இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். 

ஆயினும் தெளிவற்ற தன்மையொன்றை உருவாக்கக் கூடும் என்ற வகையில் எமது கருத்தை வெளி யிட விரும்புகின்றோம். இரணைமடுக் குளத்து நீர், இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர், இரணை மடுக் குளத்தில் வீணாகின்ற நீர் என பாவிக்கப்படும் சொற்களில் 

தெளிவற்ற தன்மையும் விளக்கக் குறைபாடும் உடையவர்களாக சிலர் உள்ளதை அறிய முடிகின் றது. இதில் இரணைமடுக் குளத்து நீர் என்பது மட்டும் குளத்ததில் தேக்கப்பட்டிருக்கும் நீரையும் அதை நம்பி வாழும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் 

வாழ்வாதாரத்தோடும் சம்பந்தப்பட்டது. இது விடயமாக எவரும் இலகுவாக கருத்துக்களை பதிவிட முடியாது. அதேநேரம்  ஏனைய சொற்பிரயோகங்களை கொண்ட நீர்கள் யாவும் குளத்திலிருந்து கொள்ளளவை மிஞ்சி வெளியேறுபவை. 

இது வீணாகிறது உண்மையே. இது பற்றி யாவரும் கருசணை கொள்ள வேண்டும். இவ்வாறு வெளியேறும் நீர் ஆணையிறவு கடல்நீரேரியில் கலந்து வீணாகிறது. இதனை ஆறுமுகம் திட்டம் அல்லது யாழ்ப்பாணத்துக்கான ஆறு என உச்சரிக்கக் கூச்சப்படுவோர் 

இங்கு ஓர் தேக்கத்தை அமைத்து நீரை பயன்படுத்த இயலும். இதுபற்றிய ஆய்வில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் நெதர்லாந்து அரசாங்க நிபுணத்துவ பிரதிநிதிகளும் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டுள்ளார்கள்.

இத் திட்டம் வெற்றி பெறும் என நம்புகின்றோம். அதே போல் பூநகரி குளம், மண்டக்கல்லாறு அ ணை என்பன அமைக்கப்பட்டு நீர் தேக்கப்படும் போது இவை விவசாயத்திற்கு பயனற்றவை யாகவும் ஏனைய தேவைகளிற்கு முழுமையாக பயன்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும். 

இம் மூன்று தேக்கங்களையும் ஒரு சுத்திகரிப்பு ஆலைக்கு இணைப்பதன் மூலம் குடா நாட்டின் முழுத் தேவையினையும் பூர்த்தி செய்ய இயலும். இதை விட பாலியாற்றுத் திட்டம் என்கின்ற ஒரு திட்டமும் வட மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் 

ஆய்வின் மூலம் வெற்றியளிக்கும் திட்டமாக இனம் காணப்பட்டுள்ளது. இவற்றை விட்டு சில அறிவியலாளர்கள் வேறு திசையில் சிந்திப்பது ஏன் என்பது புரியாதுள்ளது. இரணைமடுவில் 2017இல் 13அடி 3அங்குலமும் 2018இல் 14அடி 4அங்குலமும் நீர் 

தேக்கப்பட்ட நிலையில் நாம் 1/8 ஏக்கர், 1/4ஏக்கர் வீதம் வயல் செய்தோம். நாம் இவ்வாறு கொடிய வரட்சிகளை சந்தித்த காலங்களைப் பற்றி ஏன் சிந்திக்கின்றார்கள் இல்லை. இவ் வருடம் போல் பல வருடங்களிற்கு ஒருமுறை வரும் பெரு மழை பற்றி கூடுதலாக பேசுகிறார்கள். 

இது சிலரின் உள்நோக்கம் கொண்ட திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நெறிப்படுத் தப்படுகின்றார்களா என்கின்ற சந்தேகமும் குழப்பமும் எம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ளது. என்றார்.