பணம் ஒதுக்கியும் விளம்பர பலகை அமைக்காமல் மந்தகதியில் செயற்படும் அதிகாாிகள்..

“கம்பெரலிய” திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை திட்டங்களுக்கான வி ளம்பர பலகைகளை அமைப்பதற்கு 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டபோதும் இதுவரை விளம்பர பலகைகள் அ மைக்கப்படவில்லை. என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
சமீப காலத்தில் மத்திய அரசின் கம்பெரலிய திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் வீதிகள் உள்ளிட்ட பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் பணிகள் நிறைவுற்ற பின்னரும் அதற்கான விளம்பர பலகைகள் காட்சியப்படுத்தப்படவில்லை,
ஆனால் குறித்த ஒவ்வொரு அபிவிருத்திப் பணிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் விளம்பர பலகைக்கு ஆறாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள பொது மக்கள் விளம்பர பலகை அமைக்காது இடத்து குறித்த பணத்திற்கு என்ன நடந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.