SuperTopAds

யாழுக்கு பயணப்பையில் கசிப்பு கடத்தி வந்தவர் கைது

ஆசிரியர் - Editor II
யாழுக்கு பயணப்பையில் கசிப்பு கடத்தி வந்தவர் கைது

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தர்மபுரம் பகுதியில் இருந்து பயண பையில் யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் கசிப்பு கடத்தி செல்லப்படுவதாக பொலிஸார் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பேருந்தினை இடைமறித்து பயண பைகளை சோதனையிட்டனர். 

அதன் போது பயண பையில் இருந்து 22 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் , அதனை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.