SuperTopAds

அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Admin
அல்வாய் இளைஞர் கம்பர்மலையில் சடலமாக மீட்பு!

கம்பர்மலை பகுதியில்  இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்   அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  .

 அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் பரந்தாமன் வயது 25 என்ற இளைஞரே  நேற்று  மாலை 3:00 மணியளவில்  கம்பர்மலைப் பகுதியில் சடலமாக மீக்கப்பட்டுள்ளார் .

 நண்பர்களுடன்  சென்ற நிலையில்   குறித்த சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது  இறப்புக்காரணம் இதுவரை  அறியப்படவில்லை ,  சடலம்  உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது  .

 மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்