கிளிநொச்சி மாவட்டத்தில் 3 வைத்தியசாலைகளுக்கு அதிநவீன அம்புலன்ஸ் வண்டிகள்..

மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 3 வைத்திய சாலைகளுக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய நோயாளா் காவு வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவு வண்டிகள் உரியவர்களிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டன. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன,
கொழும்பு மாநகரசபை மைதானத்தில் வைத்து வண்டிகளை உரியவர்களிடம் கையளித்தார். அதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.