SuperTopAds

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில்..

ஆசிரியர் - Editor I
வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா ஆளுநர் தலைமையில்..

வடக்கு மாகாண தைப்பொங்கல் விழா கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (18) முற்பகல் முல்லைத்தீவு யோகபுரம் யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கலாசார திணைக்களம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை தாங்கிய பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த பொங்கல் விழாவில் கலந்த கொண்டு உரையாற்றிய கௌரவ ஆளுநர்  வடக்கு மாகாணத்தின் கல்வித் தரமானது தற்போது மிகவும் கீழ்நிலையில் இருப்பதோடு அதனை மாற்றி வடக்கு மாகாணத்தை கல்வியில் மிகச் சிறந்த 

மாகாணமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.