கடிதங்களுடன் சேர்த்து போதைப் பொருளும் விநியோகம்! தபால் ஊழியர் கைது, அரச ஊதியம் போதாது என வாக்குமூலம்...

ஆசிரியர் - Editor I
கடிதங்களுடன் சேர்த்து போதைப் பொருளும் விநியோகம்! தபால் ஊழியர் கைது, அரச ஊதியம் போதாது என வாக்குமூலம்...

வீடுகளுக்கு கடிதங்களை விநியோகிக்கும்போது போதைப் பொருள் வியாபாரமும் செய்துவந்த தபால் ஊழியர் 5150 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரான தபால் ஊழியர் போதைப்பொருள் விநியோகிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஏன் இந்தத் தொழிலை மேற்கொண்டீர்கள் என சந்தேகநபரிடம் வினவியபோது, தனக்கு கிடைக்கும் சம்பளம் வாழ போதுமானதாக இல்லை எனவும், பணம் சம்பாதித்ததாகவும் 

அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு