பிரந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இன்றையதினம் கிடைக்கப்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு கொரோதொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிப்பாளர் திரு என் சரவணபவன் தெரிவித்தார்.
இவர் அன்மையில் கொழும்பு மாவட்டத்திற்கு சென்று வந்ததன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது